வலிமை அஜித் சார் ஆக்‌ஷன் SCENES.. காலா ரஜினி சாருடன் ஸ்பெஷல் படம் - HUMA QURESHI பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18 பிப்ரவரி 2022: போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிக்கும் 'வலிமை' திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

Advertising
>
Advertising

வலிமை படக்குழுவினர்

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

ஹூமா குரேஷி பேட்டி 

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹூமா குரேஷி, பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார். முன்னதாக ரஜினியுடன் காலா திரைப்படத்திலும் நடித்திருந்த ஹூமா குரேஷி, இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக வலிமை மற்றும் காலா திரைப்படங்கள் குறித்தும் ரஜினி மற்றும் அஜித் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

காலா - வலிமை  அனுபவங்கள்..

அதில், “வலிமை, காலா ஆகிய 2 திரைப்படங்களுமே சவாலான படங்கள். காலா படம் ஒரு ஸ்பெஷலான அனுபவம், ரஜினி சார் பற்றி கூற வேண்டுமானால், ஒவ்வொருவரும் அவருடன் ஒரு படத்திலாவது வேலை செய்ய விரும்புகிறார்கள்.

அவர்களுடைய பக்கெட் லிஸ்டில் ஒரு டிக் விழுந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை, அதேபோல் பா.ரஞ்சித் மற்றும் அவரது படங்களின் தீவிர ரசிகையும் கூட. என்னுடைய முதல் தமிழ் படம் காலா. அதனால் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும் என் மீது நன்றாகவே அக்கறையும் கவனமும் எடுத்துக் கொண்டார்கள்.

அஜித் சார் சண்டை காட்சிகள் எல்லாவற்றையும் கூட அவரே பண்ணுகிறார். அவர் மிகவும் அமேசிங்கான நபர். அவருக்கு இந்த திரைப்படத்தில் மிகவும் சிரமமான சண்டைக்காட்சிகளே அமைக்கப்பட்டன. அவற்றை அவர் அர்ப்பணிப்புடன் அவர் பண்ணியுள்ளார்!  வலிமை படத்தில் எனது சண்டைக் காட்சிகள் எல்லாம் கூட ரசிகர்கள் விரும்பும்படியாக அமைய வேண்டும், சவாலாக இருந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. அது வலிமையான கதாபாத்திரம் என்பதால் இந்த கேரக்டரை பண்ணுவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தேன். ”

மேலும் வலிமை திரைப்படம் தொடர்பாக ஹூமா குரேஷி பேசும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் குறித்த முழு பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

வலிமை அஜித் சார் ஆக்‌ஷன் SCENES.. காலா ரஜினி சாருடன் ஸ்பெஷல் படம் - HUMA QURESHI பேட்டி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Actress Huma Qureshi Says about Rajini and Ajith Video

People looking for online information on Ajith Kumar, Huma Qureshi, Huma Qureshi about Ajith, Huma Qureshi about Valimai, Huma Qureshi Byte, Huma Qureshi Interview, Valimai Actress Huma Qureshi will find this news story useful.