நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்-ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்மையில் இணையத்தில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வைரல் அடித்தது.
இந்நிலையில் தற்போது அஜித்தின் மகன் ஆத்விக்-ன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது. திருமண விழா ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், அப்படியே அப்பாவை போல ஸ்டைலில் அசத்துகிறாரே குட்டி தல என கமன்ட்ஸ் போட்டு வர, இந்த போட்டோஸ் செம வைரல் ஆகி வருகிறது.