"துணிவு ஜனவரி 11, வாரிசு ஜன. 12".. பொங்கல் ரிலீஸ் குறித்து பிஸ்மி EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |
Advertising
>
Advertising

துணிவு, வாரிசு படங்களின் பொங்கல் ரிலீஸ் குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி பதில் அளித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் திரைப்படம் வாரிசு. தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி இதுவரை தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்துள்ளார். அதில், இரண்டு படங்களின் ரிலீஸ் குறித்து பதில் அளித்த பிஸ்மி, "இன்றைய நிலவரப்படி துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும். வாரிசு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும். அடுத்தடுத்த நாளில் இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்று தெரியவில்லை". என பிஸ்மி கூறியுள்ளார்.

Also Read | 50 MILLION பார்வையாளர்களை நோக்கி துணிவு டிரெய்லர்.. எடிட்டர் விஜய் பகிர்ந்த வைரல் TIMELINE PHOTO!

"துணிவு ஜனவரி 11, வாரிசு ஜன. 12".. பொங்கல் ரிலீஸ் குறித்து பிஸ்மி EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Valaipechu Bismi about Thunivu Varisu Release Date

People looking for online information on Ajith Kumar, Thunivu, Valaipechu Bismi, Varisu, Vijay will find this news story useful.