ஆலம்பனா.....! வைபவ் படத்தில் அலாவூதின் பூதமாகும் பிரபல காமெடியன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா.

தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் பல பெரிதும் மக்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஆலம்பனா.

குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடியது போன்ற அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட வகையில் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப இப்படம் உருவாகவுள்ளது. இதனை அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படத்தை பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். இவர், ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாவுள்ளது.

இப்படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். மேலும், நடிகர் முனிஷ்காந்த், காளி வெங்கர், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, ‘வேதாளம்’ பட வில்லன் நடிகர் கபீர் துஹான் சிங் உள்ளிட்டோருடன், பட்டிமன்ற பிரபலம் திண்டுக்கல் ஐ லியோனியும் நடிக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு ‘நெடுநல்வாடை’ படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகள் அமைக்கும் பணிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் கவனிக்கிறார்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களில் தனது நடிப்பு திறமையால் அசத்திய முனிஷ்காந்தும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் வரும் அற்புத விளக்கை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைத்து ஆலம்பனா என்ற தலைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இப்படத்தில் வைபவ் அலாவுதீன் ஆகவும் முனிஸ்காந்த் பூதமாகவும் நடிக்க உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது

Vaibhav Munishkanth Next Fantasy film Aalambana Characters Details

People looking for online information on Aalambana, KJR Studios, Parvathy Nair, Vaibhav will find this news story useful.