'அலாவுதீனாக' வைபவ் .. 'பூதமாக' யார் தெரியுமா?.. வெளியான 'ஆலம்பனா' போஸ்டர்.. 'ஹீரோயின்' இவங்க தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படங்களாக ஃபேன்டஸி படங்கள் இருக்கின்றன.

ஆனால் கோலிவுட்டில் ஃபேன்டஸி படங்கள் குறைவாக தான் வெளியாகின்றன. அந்த வரிசையில் வைபவ் நடிப்பில் ஆலம்பனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பாரி.கே.விஜய் இயக்குகிறார்.

அறம், குலேபகாவலி, டாக்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆலம்பனா படம் தயரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் வருது போன்ற அற்புத விளக்கை வைத்துக்கொண்டு வைபவ் போஸ் கொடுக்கிறார்.

நாற்காலியில் அமர்ந்துகொண்டு அலாவுதீனின் அற்புத விளக்கை கையில் வைத்திருக்கும் வைபவின் பின்னால், பூதம் வேடத்தில் முனிஷ்காந்த் நிற்கிறார். பார்வதி நாயர் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

ALSO READ: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது ஸ்பெஷலான நாள்! 'மனைவியுடன் செல்ஃபி'..   என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Vaibav new Movie Aalambana First Look KJR Studio ஆலம்பனா வைபவ்

People looking for online information on Aalambana, Munish Kanth, Ramdoss, Vaibhav will find this news story useful.