'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு இந்த ஊர்ல தான்! செம அப்டேட் கொடுத்த TEAM

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு அப்டேட் வெளியாகி உள்ளது. 

Advertising
>
Advertising

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். சமீபத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். "எனது மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் திரை இடத்தை பகிர்ந்து கொள்வது வரை. பழம்பெரும் நடிகர் வடிவேலு, லைக்காவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ்க்காக இணைந்ததில் மகிழ்ச்சி" என கூறியிருந்தார். 

இந்நிலையில் மைசூர் அரண்மனையில் 2வது கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு  நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு சென்னை திரும்பியுள்ளது. மேலும் 3வது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை BTS புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Shivani Narayanan Naai Sekar returns shooting update

People looking for online information on Naai Sekar Returns, Shivani Narayanan, Vadivelu will find this news story useful.