பிரபல காமெடி SCENE-ஐ RECREATE செய்த வடிவேலு.. விழுந்து விழுந்து சிரித்த லாரன்ஸ், ராதிகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. இதில், பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Advertising
>
Advertising

Also Read | BB Jodigal 2: "அலுமினியம் பித்தள".. "இத நாங்க பண்ணல.." - அத பண்ணது இவர்தானா? .

இந்த திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பி. வாசு தற்போது இயக்கி வருகிறார்.

'சந்திரமுகி 2' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில் காமெடி காட்சிகளால் அதகளம் பண்ணிய வைகை புயல் வடிவேலு, இரண்டாம் பாகத்தில் லாரன்ஸுடன் கை கோர்த்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு, கடந்த சில தினங்களுக்கு முன், மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தில், ராதிகாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, இந்த படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், நடிகை ராதிகா, சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வடிவேலு தொடர்பாக பகிர்ந்த BTS வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் Trend ஆகி வருகிறது.

படபிடிப்புக்கு மத்தியில், லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா ஆகியோர் அமர்ந்து கொண்டிருக்க, சுறா படத்தில் தான் நடித்த கச்சேரி சீன் ஒன்றை வடிவேலு Recreate செய்துள்ளார். இதனை சிரித்துக் கொண்டே வீடியோவையும் ராதிகா எடுத்து, அதனை ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.

மேலும், தன்னுடைய கேப்ஷனில், "திரைப்படங்களில் தனது அசாத்திய நடிப்பின் மூலம், பலரையும் மகிழ்வித்துள்ளார். அவர் பிரபலமான காட்சியை மீண்டும் உருவாக்கி உள்ளார். எந்த திரைப்படத்தின் காட்சி என Guess செய்யுங்கள்?" என்றும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ, தற்போது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சந்திரமுகி 2 படம் தவிர, வடிவேலு நாயகனாக நடித்து வரும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | Koffee with Karan 7: 'ஓ சொல்றியா மாமா' பாட்டுக்கு அக்ஷய் குமார் & சமந்தா வைரல் டான்ஸ்.. வீடியோ!!

பிரபல காமெடி SCENE-ஐ RECREATE செய்த வடிவேலு.. விழுந்து விழுந்து சிரித்த லாரன்ஸ், ராதிகா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu recreates sura comedy scene in chandramukhi 2 spot

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Shooting Spot, Vadivelu will find this news story useful.