நான்கு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் பூஜை சென்னையில் இன்று இனிதே துவங்கியது. படத்தில் நடிக்க உள்ளவர்கள் மற்றும் படக்குழுவினர் யார் யார் என்பது குறித்து முழு தகவல் விரைவில் வெளியாகும்.
Vadivelu : நகைக்சுவை நடிகர்கள் என்பவர்கள் படத்தில் வரும் சிரிப்பு காட்சிகளில் நடிப்பவர்கள் என்பதை தாண்டி, படத்தில் அவர்களின் கேரக்டர் மனதில் ஆழமாக பதியும் அளவிற்கு வலம் வந்தவர் வடிவேலு. வடிவேலு என்ற பெயரை தாண்டி அவர் நடித்த படங்களில் உள்ள கேரக்டர் பெயர்களான 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்', அசால்டு ஆறுமுகம், படித்துரை பாண்டி என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு நகைச்சுவை தாக்கம் அதிகமாகஇருக்கிறது. இன்றைக்கும் மீம் கிரியேட்டர்களின் ஆஸ்தான நாயகர்களில் ஒருவராக வடிவேலு இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களில் ஒரு படத்தில் கூட வடிவேலு நடிக்காத போதிலும், மீம்ஸ் நாயகனாக உயிர்ப்புடன் இருந்தார்.
Naai Sekar : இந்நிலையில் சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில், நாய் சேகர் என்ற பெயர் வடிவேலுவுக்கு பெரும் புகழ் தந்த படங்களில் ஒன்று. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த தலைப்பை வேறு நிறுவனம் வைத்து இருந்தது. அந்நிறுவனம் நடிகர் சதீஷை வைத்து தயாரிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்று பெயரிட்டுள்ளது. எனவே வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கும் படத்துக்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயரிடப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
Naai Sekar Returns : நான்கு ஆண்டுக்கு பின்னர் வடிவேலு நடிக்க உள்ளதால் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று இனிதே துவங்கியது. படத்தில் நடிக்க உள்ளவர்கள் மற்றும் படக்குழுவினர் யார் யார் என்பது குறித்து முழு தகவல் விரைவில் வெளியாகும்.