"காமெடியன்ஸ்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க".. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கலக்கல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல நடிகையுடன் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்.. BTS வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்த SRK!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்துள்ளார். சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை செனனையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். "காமெடியன்ஸ்லாம் கொஞ்சம் தள்ளிப் போங்க"  போன்ற வசனங்கள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.

 

Also Read | அன்பே சிவம், பகவதி பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்.. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Naai Sekar Returns Movie Trailer Released

People looking for online information on Naai Sekar Returns, Naai sekar Returns movie, Naai Sekar Returns Movie Trailer, Vadivelu will find this news story useful.