வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு'.. H .வினோத் போட்டோவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் டபுள் அப்டேட்!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.  சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை செனனையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | போடு! வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. TV உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Naai Sekar Returns Movie OTT Rights

People looking for online information on Naai Sekar Returns, Naai Sekar Returns Movie OTT Rights, Naai Sekar Returns Movie Update, Netflix, Vadivelu will find this news story useful.