நடிகர் வடிவேலு சென்னை தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நிறைய விஷயங்களை கலகலவென்று பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கொரோனா குறித்து பேசும்போது, “கொரோனா ஊசி போடுவதற்கு அனைவரும் முதலில் தயங்கினர். இப்போது ஆர்வமாக வரிசையில் நிற்பது ஆரோக்கியமாக இருக்கு. ஜனங்க தயவு செஞ்சு ஊசி போடுங்க. பாதுகாப்பா இருங்க. கெஞ்சி கேக்குறேன்.” என்று கூறினார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும்போது, “ஆட்சிக்கு வந்து ஒன்றரை மாசத்துலயே உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு தமிழக முதல்வர் கொரோனாவை கட்டுப்படுத்தியிருக்காரு” என்று கூறினார்.
அத்துடன் சினிமா, சீரியல் என்றிருந்த சினிமா இப்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன் என்பது போல் ‘ஓடிடியில்’ போய்க்கொண்டிருக்கிறது. ஓடிடியும் அடுத்த குட்டி போடலாம் என்று கூறிய வடிவேலு, தமிழகத்தில் கொங்கு நாடு தனியாக பிரிக்கப்படும் யோசனை குறித்து கேட்டபோது, “ராம்நாடு, ஒரத்த நாடுனு பலநாடுகள் இருக்கு. அதெல்லாம் பிரிக்க முடியுமா? இப்படி கொங்குநாடுனு பலநாடா பிரிச்சா அவ்ளோதான். தமிழ்நாடு நல்லா இருக்கு. இதெல்லாம் கேக்கும்போது தல சுத்துது. நான் அரசியல் பேசல!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: நீல நிற Biker உடையில் தல!.. Motion Poster-ஐ தொடர்ந்து வெளியான ‘வலிமை’ மாஸ் போஸ்டர்!