அந்த டான்ஸ் தான் அள்ளுது.. கச்சா பாதாம் பாட்டுக்கு நடனமாடிய வடிவேலு! செம்ம வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | குட்டி VP & குட்டி பிரேம்ஜி.. கங்கை அமரன் பிறந்தநாளில் வெங்கட் பிரபு பகிர்ந்த வைரல் THROWBACK போட்டோ..

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்துள்ளார். சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நாய்களை கடத்தும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நடிகர் வடிவேலு, வட இந்தியாவில் பிரபலமான கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு வடிவேலுவின் நடனம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

 

Also Read | "கமல் சார் இத தான் சொல்லுவாரு".. வார இறுதியில் நடக்க போவதை முன்பே கணித்த Azeem.. சம்பவம் இருக்கு!

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Dancing for Kacha Badam Song Naai Sekar Returns

People looking for online information on Kacha Badam Song, Naai Sekar Returns, Vadivelu, Vadivelu Dancing Kacha Badam Song will find this news story useful.