DANCE, பாட்டுன்னு இளசுகளுடன் VIBE ஆன நடிகர் வடிவேலு.. வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று சமூக வலைத்தளத்தில் நிறைய நேரம் செலவிடும் யாருமே நடிகர் வடிவேலு முகத்தை பார்க்காமல் நிச்சயம் தங்களின் நாளை கடந்து விட முடியாது.

Advertising
>
Advertising

அந்த அளவுக்கு இன்று இளசுகள் மத்தியில் அதிகம் பேசப்படும் மீம்ஸ் கலாச்சாரத்தில் வடிவேலு மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.

காமெடி நடிகராக வலம் வந்த காலத்தில் வடிவேலு கொடுத்த முக பாவனைகள் மற்றும் காமெடி காட்சிகள் என அனைத்தும் எந்தவித மீம்ஸ்களுக்கு கூட பொருந்தும் வகையில் தான் அமைந்திருக்கும்.

மீம்ஸ் கிரியேட்டர்களின் 'காட் ஃபாதர்' ரேஞ்சுக்கு அனைவரும் வடிவேலுவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவர் பாட்டு பாடி நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளாக முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த வடிவேலு, எக்கச்சக்க ஹிட் ரோல்களில் நடித்துள்ளார். நடுவே சில ஆண்டுகள் நடிப்பில் கேப் போட்ட வடிவேலு, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். கதையின் நாயகனாக சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திலும், ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். இது தவிர, விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் வடிவேலு குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்து படங்களில் வடிவேலு பணிபுரிந்து வருவதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு வடிவேலு சென்றதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அங்கே மாணவ மாணவிகள் முன்பு மேடையில் பாட்டு பாடி, நடனமாடியும் அசத்தி உள்ளார்.

காமெடி நடிகர் என்பதை தாண்டி, குணச்சித்திர நடிகர் மற்றும் பாடகரான வடிவேலு, திரைப்படங்களிலும் சில பாடல்களை பாடி உள்ளார். அவரே பாடிய "எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்" என்ற பாடலை பாடி, சில நடன அசைவுகளையும் அசத்தலாக ஆடி இருந்தார். அதில் ஒரு சில ஸ்டெப்கள் மாணவ மாணவிகளை வேற லெவலில் Vibe ஆக்கவும் செய்திருந்தது.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரையும் ஒரு நிமிடம் ஆட்டம் போட வைத்துள்ளது.

DANCE, பாட்டுன்னு இளசுகளுடன் VIBE ஆன நடிகர் வடிவேலு.. வைரலாகும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu dance and sing along with students video gone viral

People looking for online information on Maamannan, Naai Sekar Returns, Vadivelu will find this news story useful.