வந்துட்டார்யா வைகைப்புயல்! வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட ரெட் கார்டு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டு இருக்கும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.

அந்த படத்திற்கு  'நாய் சேகர்' என பெயர் வைப்பதாக வடிவேலு அறிவித்தார். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தலைநகரம், மருதமலை படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய தலைநகரம் படத்தில் தான் புகழ்பெற்ற நாய் சேகர் கதாபாத்திரம் உருவானது.

இந்த நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்காக பதிவு செய்துள்ளதால் வடிவேலு நடிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு - சுராஜ் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2021) வெளியானது.  பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்.

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும்  பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu comeback film TITLE announced with a FIRST LOOK

People looking for online information on Lyca, Suraj, Vadivelu will find this news story useful.