சந்திரமுகி-2 படத்தின் ஷூட்டிங்.. ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு! செம போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலு விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் வெளியாகி உள்ளது .

Advertising
>
Advertising

Also Read | தந்தை ரஜினியுடன் படு ஜோராக கிளம்பிய ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவல்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. தற்போது இந்த மைசூர் படப்பிடிப்பை நடிகர் வடிவேலு முடித்து கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மைசூர் விமான நிலையத்தில் சென்னை திரும்பும் போது அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | "Blue Saree'ல ஒரே ஒரு லுக் தான்.. மொத்த 'Trending'கும் க்ளோஸ்.." இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷாவின் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu at Mysore Airport Pictures From Chandramukhi 2 Shooting

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Shooting, Mysore Airport, Vadivelu will find this news story useful.