"வடிவேலுவும் உதயநிதியும்".. தரமான சம்பவம்.. இணையத்தை தெறிக்கவிடும் சென்சேஷனல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் வடிவேலுவை நகைச்சுவை களத்தில் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் பிரபலம்.

Vadivelu and Udhayanidhi meets viral photos வடிவேலு, உதயநிதி

பலரும் வடிவேலுவை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம், காமெடி காட்சிகளில் வடிவேலு எதிர்கொண்ட சூழல்கள் மற்றும் வடிவேலு பேசிய வசனங்கள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் சூழலோடு ஒத்துப் போவது தான். இதனை வைத்துதான் பல மீம் கிரியேட்டர்கள் வடிவேலுவை வைத்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

Vadivelu and Udhayanidhi meets viral photos வடிவேலு, உதயநிதி

இன்றைய மீம்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் வடிவேலு, கொஞ்ச காலம் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். இந்தநிலையில் அண்மையில் தான் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ திரைப்படம் தொடர்பான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடைந்த நிலையில், நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கி விட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகம் ஆகி விட்டனர்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ‘இம்சை அரசன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி’, ‘தெனாலிராமன்’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்த வடிவேலு, பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கும் வடிவேலுவின் முதல் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதேபோல் தமது அடுத்த திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு, அதன் பிறகு தன்னுடைய பாணியை தொடர போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி அவர் நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பார் என்று தெரிகிறது. இதேபோல் ஹிஸ்டாரிக்கல் திரைப்படங்களில் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை என்றும் வடிவேலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அண்மையில் வடிவேலுவின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர். அந்த பிறந்த நாள் பார்ட்டியில் தான் வடிவேலுவின் திரைப்படம் மற்றும் அவரது படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சந்தோஷ் நாராயணன் வடிவேலுவை, இந்த திரைப்படத்தில் ஒரு பாடகராகவும் பயன்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவும் உதயநிதியும் தற்போது சந்தித்து இருக்கின்றனர். இந்த சந்திப்பில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை, நடிகர் வடிவேலு நட்பு ரீதியாக சந்தித்தார். பூங்கொத்து கொடுத்து இருவரும் சந்திப்பின் நிமித்தமாக நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன ‌.

தமிழக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறியப்படுபவர்.

பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ஆர்டிக்கள்15 என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் இந்த திரைப்படத்தை, வலிமை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.‌

வடிவேலும் உதயநிதியும் டாப் ட்ரெண்டிங் டாப்பிக்காக இருந்து வரும் இன்றைய சூழலில் இவர்களின் சந்திப்பு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: போராட்ட களத்தில் குதித்த நடிகர் உதயநிதி..  எதுக்காக தெரியுமா?..  அனல் பறக்கும் பேட்டி.. Video

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu and Udhayanidhi meets viral photos வடிவேலு, உதயநிதி

People looking for online information on Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.