“இன்னொரு DELETED KISSING SCENE-ம் இருக்கு”.. 'வாழ்' ஹீரோ.. ஹீரோயின் செம்ம FUN RIDE.. VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மதுரம் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரதீப், பானு, திவா மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் வாழ். 

அதிதி பாலன் நடித்த ‘அருவி’ திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆனது. 

இந்த படத்தின் திரைக்கதை, மியூசிக் மற்றும் விஷூவலுடன் கதாபாத்திரங்களின் நடிப்புக்கும் பலவிதமான பாராட்டுக்கள் வரும் நிலையில், இப்படத்தில் பிரதீப் - பானுவுக்கு இடையே வரும் Kissing காட்சியும், அந்த காட்சி இடம் பெறும் சூழ்நிலையும் பலரிடையே பிரபலமாகியது. 

இந்நிலையில் இந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி பானு இருவரும் சைக்கிளில் ஜாலியாக ரெய்டு போகும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் பானு சைக்கிளை ஓட்டுகிறார். பிரதீப் பின்னால் உட்கார்ந்துள்ளார். பிரதீப் அருவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

குறிப்பாக படத்தில் இன்னொரு டெலிட் செய்யப்பட்ட Kissing Scene இருந்ததாகவும், “அது மட்டும் படத்தில் இடம் பெற்றிருந்தால் இன்னும் கொஞ்சம் Scene போட்ருப்பேன்”.. என்றும் fun ஆக கூறியுள்ளார்.

இதனிடையே பானுவை ட்விட்டரில் இணைந்ததை அடுத்து வரவேற்ற இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படக்குழுவினர் குறித்த தகவல்களையும், சுவாரஸ்ய தருணங்களையும் பகிர்ந்து வருகிறார். 

“இன்னொரு DELETED KISSING SCENE-ம் இருக்கு”.. 'வாழ்' ஹீரோ.. ஹீரோயின் செம்ம FUN RIDE.. VIDEO! வீடியோ

Vaazhl hero opens up deleted kissing scene heroine ride video

People looking for online information on Arun Prabu Purushothaman, Bhanu, Sivakarthikeyan Productions, Vaazhl will find this news story useful.