அடடே..தனுஷ் நடிக்கும் 'வாத்தி'‌பட ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல இந்திய நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வெந்து தணிந்தது காடு படத்திற்காக களமிறங்கிய சிம்பு.. போட்டோவுடன் வந்த செம அப்டேட்!

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.  இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.

தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு  முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

தனுஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு  வாத்தி படத்தின் முதல் லுக் போஸ்டர், இரண்டாவது லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன.

திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Vaathi Sir Movie Audio Rights Bagged by Aditya Music

People looking for online information on Aditya Music, Dhanush, GV Prakash Kumar, Vaathi Sir Movie will find this news story useful.