'வாத்தி' படத்தின் 'வா வாத்தி' பாடல்.. தனுஷ் பாட & G.V. பிரகாஷ் வாசிக்க.. அசத்தலான SNEAK PEEK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாத்தி' படத்தின் சிங்கிள் பாடலின் முன்னோட்ட SNEEK PEEK வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நான் தான்பா PRODUCER"... Love Today பட Public Review-வில் அர்ச்சனா கல்பாத்தி! வைரல் வீடியோ

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி , இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  ‘வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமையை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள்  "வா வாத்தி" பாடல் ஸ்வேதா மோகன் குரலில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு தற்போது இந்த பாடலின் SNEEK PEEK வீடியோவை வெளியிட்டுள்ளது. முதல் சிங்கிள் பாடலின் ஆரம்ப வரிகளை தனுஷ் பாட, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கீ போர்டு வாசிப்பது போல இந்த SNEEK PEEK வீடியோ அமைந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் அடுத்து தயாராகி வருகிறது.

 

Also Read | "டெய்லி காலைல சாப்பிட்ற உணவு இவை தான்".. நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த சமையல் குறிப்புகள்!

தொடர்புடைய இணைப்புகள்

Vaathi Movie First Single VaaVaathi Song Sneak Peek

People looking for online information on Dhanush, GV Prakash Kumar, Vaathi, Vaathi Movie First Single, VaaVaathi Song Sneak Peek will find this news story useful.