விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்நிலையில் அந்த சீரியல் நடிகர் ஜீவா வாத்தி கம்மிங் பாடலுக்கு அச்சு அசல் அப்படியே ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

தொடர்புடைய இணைப்புகள்

Vaathi coming dance by pandiyan stores actor வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

People looking for online information on Master, Pandiyan Stores, Vijay will find this news story useful.