பிரபல மலையாள நடிகை சம்யுக்தா. இவர் தமிழில் தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | “நான் ஸ்டார் இல்லனு கமிட் பண்ணாங்க😅”.. ஜாலியா சொன்ன 'வசந்த முல்லை' ஹீரோயின்..!
அண்மையில் சில நிகழ்வுகளில் பேசிய நடிகை சம்யுக்தா, தன் பெயருக்கு பின்னொட்டாக இருக்கும் தனது சாதி அடையாளத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்ததுடன், இனி தன்னை சம்யுக்தா என்கிற பெயரை மட்டுமே சொல்லி அடையாளப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
பாலக்காடு பெண்ணான நடிகை சம்யுக்தா, தமிழ் நன்றாக தெளிவாக பேசக்கூடியவர் தான் என்றாலும் அரிதாக தமிழ் படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா உயிரியல் பாடமெடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இப்படம் கல்வி முறையில், கல்வி நிலையங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பேசுவதாக தெரிகிறது.
இதனிடையே தனது படிப்பு குறித்து முன்பொருமுறை சம்யுக்தா பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, தான் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தவர், அனைவரும் கல்வி பயிலுதல் அவசியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Also Read | "Set போட்டு புரொடியூசருக்கு செலவு வைக்க கூடாது".. நிஜ தியேட்டர் Rest Room-ல நடிச்ச சிம்ஹா..! Vasantha Mullai