ஷூட்டிங் தொடங்கும் முன்பே விற்கப்பட்ட வாடிவாசல் படத்தின் "டப்பிங் உரிமை"?...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது. 

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், வாடிவாசல் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனம் ஏற்கனவே தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்த பல தமிழ் படங்களின் இந்தி உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Vaadivasal movie rights sold before shoot start

People looking for online information on Kalaipuli S. Dhanu, R Velraj, Suriya, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.