வெற்றிமாறன் இயக்கத்தில், தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்து புகழ் பெற்றவர் கென் கருணாஸ்.

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகனான கென் கருணாஸ் தற்போது புதிய ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதில் தான் சன் டி.வி சித்தி-2 சீரியலின் இளம் நாயகி இணைகிறார்.
சன் டிவி தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடிப்பிலான மெகா ஹிட் சீரியலான சித்தி சீரியலின் தொடர்ச்சியாக சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய பின், நடிகை ப்ரீத்தி ஷர்மா மற்றும் நந்தன் லோகநாதன் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் கென் கருணாஸ் தன் நண்பர் ஈஷ்வருடன் இணைந்து எழுதி, இசையமைத்து, தனது தாயார் கிரேஸ் கருணாஸூடன் இணைந்து பாடி நடித்திருக்கும் வாடா ராசா ஆல்பம் பாடலில் நடிகை ப்ரீத்தி ஷர்மா முதன்மை நாயகியாக நடனம் ஆடி நடித்துள்ளார்.
சோனி மியூசிக் தளத்தில் ஆகஸ்டு 19 மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகிவருகிறது. அஸ்வின் நடிப்பில் குட்டி பட்டாஸ் பாடலை இயக்கிய, இயக்குநர் வெங்கி இயக்கும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தி ரூட் இந்த பாடலை தயாரித்துள்ளது.