வர்றேன்! திரும்ப வர்றேன்..! வெளியான மாநாடு படத்தின் மிரட்டலான புதிய டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

Advertising
>
Advertising

சிம்புவை வைத்து இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். 

இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகிவுள்ளது. 

வர்றேன்! திரும்ப வர்றேன்..! வெளியான மாநாடு படத்தின் மிரட்டலான புதிய டிரெய்லர்! வீடியோ

Tags : Str, Maanaadu

தொடர்புடைய இணைப்புகள்

V House Productions present the new trailer of STR Maanaadu

People looking for online information on Maanaadu, Str will find this news story useful.