"நாங்க டாம் அண்ட் ஜெர்ரி!"... இன்ஸ்டாகிராமில் விஜே ரக்‌ஷன் பகிர்ந்த க்யூட் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக அறியப்பட்டவர் விஜே ரக்‌ஷன்.  விஜேவாக இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியின் அது இது எது, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வப்போது கேரக்டர் ரோல்களை ஏற்று துணை நடிகராக நடித்தும் வந்தார் ரக்‌ஷன்.

இதனாலேயே ரக்‌ஷனை பலருக்கும் பிடித்துப் போனது. பின்னர் குக் வித் கோமாளி சீசன்களிலும் நடுவர்களுடன் பங்குபெற்று ரக்‌ஷன் கவனிக்க வைத்தார். இந்த நிலையில் தான் ரக்‌ஷனை ஒரு முக்கிய திரைப்படத்தில் காண முடிந்தது.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ரக்‌ஷன் படம் முழுவதும் ஹீரோவுடன் இணைந்து வரும் முக்கிய கதாபாத்திரமாகவே தோன்றி மாஸ் காட்டினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2-ன் டைட்டில் வின்னரான கனியின் சகோதிரி நிரஞ்சனியும் இந்த படத்தில் நடித்திருந்தார். நிரஞ்சனியை தான் அண்மையில் இப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி மணந்தார். நிரஞ்சனி அகத்தியன் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.

ஹீரோ ஹீரோயினுக்கு நிகராகவே ஹீரோயின் தோழியாக நிரஞ்சனியும் ஹீரோவின் தோழனாக ரக்‌ஷனும் இந்த படத்தில் நடித்திருந்தனர். அந்த அளவில் ரக்‌ஷனுக்கு இந்த படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ரக்‌ஷன் பாசிடிவான நிறைய நல்ல புரோஜக்ட்களை செய்துகொண்டு வருவதில் அவரது ரசிக்ர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் ரக்‌ஷன் தன்னுடைய சகோதரியுடன் சிறு வயதில் இணைந்து எடுத்துக்கொண்ட தமது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நானும் அக்காவும்.. நாங்கள் டாம் அண்ட் ஜெர்ரியாக இருந்தோம்!” என கேப்ஷனிட்டுள்ளார்.

ALSO READ: தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரெய்லர்.. கார்த்திக் சுப்புராஜ் மாஸ் ட்வீட்! படு குஷியில் ரசிகர்கள்!

Used to be Tom & Jerry vj rakshan viral instagram post

People looking for online information on Kannum Kannum Kollaiyadithaal, VJ Rakshan will find this news story useful.