அடேங்கப்பா! 37 கோடி ரூபாயா?.. படு ட்ரெண்டாகும் ஊர்வசி ரவுடேலாவின் வேற லெவெல் டிரஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகை மற்றும் மாடலாக திகழ்பவர் தான் ஊர்வசி ரவுடேலா. இவர் 2011 ஆம் ஆண்டு தென்கொரியாவில் Miss Asian பட்டத்தை வென்றார். பின் 2015 ஆம் ஆண்டு  Miss Diva பட்டத்தையும், அதே ஆண்டில் Miss Universe போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்றார்.

Advertising
>
Advertising

ஹிரோயினாக:

            பாலிவுட்டில் "சிங் ஷாப் தி கிரேட்" படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்கால்  போன்ற மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். தமிழில் The Legend சரவணா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படத்தை உல்லாசம் படம் இயக்கிய ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இப்படத்தில் பிரபு, விஜயகுமார், லதா போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.


வைரல் நடிகை:

                    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோ வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவிடுவதுண்டு. மேலும் அவரது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் ஆர்வம் உள்ள இவர் தனது புகைப்படங்களை வெளியிடும் நாட்களில் ட்ரெண்ட் தான். தனது பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கூறியவர், அதையும் அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.


37 கோடி ஆடை:

            பிரபல நட்சத்திரங்கள் பேஷன் ஷோக்களில், தனியார் நிகழ்ச்சிகளில், மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது விலை உயர்ந்த ஆடை அணிவது வழக்கமாகும். இந்த நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஊர்வசி ரவுடேலா, உலகிலேயே மிக விலை உயர்ந்த தங்கத்திலான ஆடையை அணிந்திருந்தார். அதன் மதிப்பு ரூ 37 கோடி ஆகும். தற்போது இந்த ஆடை அணிந்திருந்த புகைப்படம் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Urvasi Rautala wore Golden Dress worth 37 crores.

People looking for online information on ஊர்வசி ரவுடேலா, சிங் ஷாப் தி கிரேட், Golden Dress, Urvasi Rautala will find this news story useful.