"BAT, BALL வெச்சு விளையாடணும்.." கிரிக்கெட் வீரரை குறிப்பிட்டு 'THE LEGEND' பட ஹீரோயின் பரபரப்பு பதிவு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் ஊர்வசி ரவுதலா. ஹிந்தி திரை உலகில், இவர் அதிக பிரபலமாக இருப்பதன் மூலம், ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் ஊர்வசிக்கு உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆஸ்திரேலியாவில் நடிகை தமன்னா..‌ நதிக்கரையில் நடத்திய ரம்மியமான சூப்பர் ஃபோட்டோ ஷூட்!

சமீபத்தில், லெஜண்ட் சரவணன் நடித்து வெளியாகி இருந்த 'தி லெஜண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம், கோலிவுட் சினிமாவிலும் நாயகியாக ஊர்வசி அறிமுகமாகி இருந்தார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், நடிகை ஊர்வசி ரவுதலா, சமீபத்தில் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

ஊர்வசி தன்னுடைய இன்ஸ்டாவில், "சின்ன பையா. நீ பேட் மற்றும் பந்துடன் விளையாட வேண்டும். எனக்கு அவமானத்தை ஏற்படுத்த உனக்கு நான் சிறிய பெண்ணோ அல்லது அப்பாவியான பெண் ஒன்றும் கிடையாது" என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் #Rakshabandhan, #RPChotuBhaiyya உள்ளிட்ட சில ஹேஷ்டேக்குகளையும் அவர் இணைத்துள்ளார்.

இந்த சம்பவம், இணையவாசிகள் மத்தியில் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. மேலும், ஊர்வசி தனது இன்ஸ்டா பதிவில் கிரிக்கெட் குறித்து குறிப்பிட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர் பற்றி மறைமுகமாக தெரிவித்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சின்ன பையா என்றும் ஹிந்தியில் அவர் குறிப்பிட்டிருப்பதால், இளம் கிரிக்கெட் வீரராக கூட இருக்கலாம் என்று கருதுகின்றனர். அதே போல, தன்னுடைய ஹேஷ்டேக்கிலும் 'RP' என ஊர்வசி ரவுத்தலா பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊர்வசி ரவுதலா பதிவு தொடர்பாக, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், எதற்காக இவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பதும் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும், விரைவில் இதற்கான விளக்கத்தை ஊர்வசி வேறு பதிவில் அளிப்பாரா என்பதையும் நெட்டிசன்கள் அறிந்து கொள்ளும் முனைப்பில் உள்ளனர்.

Also Read | பிரான்ஸ் டூர் முடிஞ்சது.. அடுத்து இந்த நாடு தான்! ஐரோப்பாவில் பிரியா பவானி சங்கர்!

Urvashi rautela latest insta post viral among fans

People looking for online information on Urvashi Rautela, Urvashi Rautela latest insta post will find this news story useful.