அடுத்தடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. FULL LIST ரெடி!.. இனி ஜமாய் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா புதிய படங்களின் ரிலீஸ் அறிவிப்பால்  தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

மார்ஃப் செய்த மாளவிகா மோகனன் ஆபாச PHOTO: முன்னணி செய்தி நிறுவனத்திற்கு எதிராக கொந்தளித்த நடிகை

பிப்ரவரி முதல் அடுத்தடுத்து பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளன. இதனால் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளன. பிப்ரவரி முதல் மே வரை வரிசையாக படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

வீரமே வாகை சூடும்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடிப்பில்   அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், நாளை 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் U/A  சான்றிதழ் பெற்றுள்ளது. 2 மணி நேரம் 46 நிமிடம் ஓடுகிறது என சென்சார் போர்டு அறிவித்துள்ளது. தமிழ் நாட்டில்  560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வெளியீடாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும உலகமெங்கும் வெளியாகிறது.

வலிமை

வலிமை, தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றான இந்த படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'வலிமை' படம் சென்சாரகி CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதே ஷியாம்

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 14, 2021 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.  

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷியாம்' வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது.

RRR

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது.

RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.  இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 மார்ச் 25ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது.

DON

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார். டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் அங்கையற்கன்னி எனும் பெயரில் பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். RRR படத்தின் வினியோகஸ்தரும், டான் படத்தின் தயாரிப்பாளரும் லைக்கா என்பதால் டான் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் அல்லது திட்டமிட்டபடி இதே தேதியில் வெளியாகலாம்.

KGF 2

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.

ஜூலை 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகின்றன.

'பத்து தல' படத்தின் புதிய போஸ்டருடன் வெளியான கொல மாஸான GLIMPSE வீடியோ! STR Fans-க்கு பெர்த் டே ட்ரீட்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Upcoming Tamil Telugu Movies Releasing in Theaters

People looking for online information on தியேட்டர், திரைப்படங்கள்Theatre Release, OTT, OTT Release, Upcoming List of Tamil Telugu Malayalam movies will find this news story useful.