அக்டோபரில் விஜய் சேதுபதியின் புதிய படம் ரிலீஸ்? தியேட்டரா? OTTயா? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி கோலிவுட்டில் மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவராகவும், தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் பல படங்களை கையில் வைத்திருக்கிறார்.

இவர் கடைசியாக தீபக் சுந்தர்ராஜன் இயக்கிய நகைச்சுவை திகில் படமான 'அனபெல் சேதுபதி' படத்தில் நடித்தார், தற்போது விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் இன்று (01.10.2021), ட்விட்டரில் தனது வரவிருக்கும் 'முகிழ்' திரைப்படம், அக்டோபர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் எஸ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளை விஜய் சேதுபதி அறிமுகபடுத்துகிறார். 62 நிமிட நீளமுள்ள ஒரு யதார்த்தமான அணுகுமுறையுடன் கூடிய குழந்தைகளுக்கான படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் 12 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி வருகிறது.

இந்த படத்தை விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ரேவா இசையமைத்துள்ளார், எடிட்டிங் கோவிந்தராஜ், ஒளிப்பதிவு சத்யா பொன்மர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Upcoming film 'Mugizh' theatrical release on October

People looking for online information on Regina Cassendra, Vijay Sethupathi will find this news story useful.