"அட, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லையே.." 'விக்ரம்' - 'மீனா' இணைந்து இருக்கும் அசத்தல் புகைப்படம்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

சமீபத்தில், தனது சினிமா பயணத்தில் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, இது தொடர்பாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த மீனா, இதற்காக அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை மீனா, நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.

'சேது' திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்த விக்ரம், அதன் பிறகு, பல முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்தும், பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இதனிடையே, விக்ரம் மற்றும் மீனா ஆகியோர் இருக்கும் புகைப்படம், இவர்கள் இருவரும் இணைந்து 'காதலிசம்' என்னும் பாப் ஆல்பத்திற்காக இணைந்து எடுத்ததாகும். இருவரும் இணைந்து, இதில் பாட்டு பாடி, நடித்துள்ள நிலையில், அதிக பிரமோஷன்கள் இல்லாமல், இந்த ஆல்பம் ரிலீஸ் ஆனதால் தான், இந்த புகைப்படங்கள், மக்களிடையே அதிகம் தெரியாமல் போனது.

தொடர்புடைய இணைப்புகள்

பாப் ஆல்பத்திற்காக விக்ரம் - மீனா இணைந்து எடுத்த ஃபோட்டோஷூட் | Unseen pics of Vikram and Meena for this project - Dont miss VIRAL pics

People looking for online information on Chiyaan Vikram, Kadhalism, Meena, Vikram will find this news story useful.