“எதிர்பாக்காத அறிவிப்புலாம் வருது!!”.. 'வாடிவாசல்' மரண மாஸ் அப்டேட் கொடுத்தது யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக தனக்கே உரிய தனித்துவமான திரைமொழியாலும் கதைத் தேர்வாலும் அறியப்பட்டவர் இயக்குநர் வெற்றிமாறன். 

தொடர்ந்து தனுஷின் நடிப்பில் ஆடுகளம், அசுரன் படங்களின் மூலம் நன்மதிப்புகளையும் பாராட்டுக்களையும் பெற்ற வெற்றிமாறன், சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.  முன்னதாக அசுரன் திரைப்படத்துக்காகவும், தனுஷ் நடிப்புகாகவும் தேசிய விருதுகள் கிடைத்ததை அடுத்து வெற்றிமாறன் சூர்யா கூட்டணியிலான வாடிவாசல் படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் வாடிவாசல் படத்துக்கும் இசையமைக்கிறார். சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து பெருவெற்றி பெற்ற சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையில் மிரட்டியிருந்தார். இதேபோல் வெற்றிமாறனின் அசுரன் படத்துக்கும் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில் சூர்யா - வெற்றிமாறனின் படமான வாடிவாசல் படத்துக்கான இசையில் பிஸியாக இருக்கும் ஜி.வி. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வாடிவாசல் பற்றி அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், “விரைவில், மிக சீக்கிரமாகவே வரும். அத்துடன் சிறப்பான, எதிர்பார்த்திராத அறிவிப்புகள் எல்லாம் வந்த வண்ணம் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இந்த பதில் ட்விட்டரில் வைரலாகி சூர்யா மற்றும் வெற்றிமாறனின் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ: "அப்படியே Yoga டீச்சராவே மாறிப் போய்ட்டாங்களே!".. கீர்த்தி சுரேஷின் செம்ம கலாய்.. Trending Video!

தொடர்புடைய இணைப்புகள்

Unexpected announcements onway GV Prakash vaadivaasal Surya

People looking for online information on GV Prakash Kumar, Surya, Vetrimaaran will find this news story useful.