WWE HALL OF FAME: UNDERTAKER-அ பாத்து தான் வளந்தோம்.. கடைசியா ஒரு TIME பேசவாச்சும் சொல்லுங்க.. கதறும் 90S KIDS..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

WWE, 18, பிப்ரவரி, 2022: கடந்த முறை நடந்த WWE WrestleMania மிகவும் பரபரப்பாக இருந்தது. அதில் தான் அண்டர்டேக்கர் விலகினார். 

Advertising
>
Advertising

WrestleMania

WrestleMania-வில் அண்டர் டேக்கரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ரோமன் ரைன்ஸ் வருகைக்கு பின் சரிந்ததாக ரசிகர்களால் பேசப்பட்டாலும், இன்னொரு பக்கம், இனி டேக்கரை WrestleMania-வில் பார்க்க முடியாது என கதறினர் ரசிகர்கள்.

Also Read: "நான் மிடில் க்ளாஸ்.. நடிக்குறதுலாம் பெரிய Dream!".. வலிமை ஹீரோயின் ஹூமா குரேஷி Exclusive பேட்டி..

தோல்வியும் விலகலும்..

அதுவரை 23 WrestleMania-களில் பங்கேற்ற அண்டர் டேக்கருக்கு, அது 2-வது தோல்வியாக அமைந்தது. மொத்தம் 25 WrestleMania போட்டிகளில் பங்கேற்ற ஒரே நபராகவும் பெருமை பெற்ற  அண்டர் டேக்கர், ரோமன் ரைன்ஸிடம் அடைந்த தோல்வியை தொடர்ந்து WWE போட்டிகளில் இருந்து விலகிய நிகழ்வு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

WWE Hall of Fame

அந்த சம்பவத்துக்கு பின், தற்போது அண்டர்டேக்கரை, WWE Hall of Fame-ன் Class of 2022-ற்காக எடுத்துக்கொள்ளப் பட்டுவிட்டதாக WWE அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்துக்கும் கவுரவத்துக்கும் அண்டர் டேக்கர் உரியவர் தான் என சில ரசிகர்கள் மேம்போக்காய் பேசி, உற்சாகமுடன் சொன்னாலும், கூட 90ஸ் ரசிகர்கள் பலரும் மிகவும் வருத்தமாக இருக்கின்றனர்.

90ஸ் கிட்ஸ்

ஆம், அண்டர் டேக்கரை சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த 90ஸ் கிட்ஸ் கருத்துப்படி, அண்டர் டேக்கர் தான் எடுத்துக்கொண்ட இந்த WWE கேரக்டருக்கு  100 வீதம் தன்னை முழுதாக அர்ப்பணித்து WWE ரசிகர்களை எண்டர்டெயின் செய்தார், அவரை இத்துடன் முடக்கி வைப்பதாக படுகிறது என கூறி வருகின்றனர்.

முழு show-வை டெடிகேட் பண்ணுங்கள்...

இன்னும் சில ரசிகர்கள் குறைந்த பட்சம், ஒரு முழு show-வை அண்டர் டேக்கர்-க்கு  டெடிகேட் பண்ணுங்கள். அதில் மிகப்பெரிய லிஜெண்டுகளை, அதாவது  Kane, Foley, Vince, Austin, Bret, Lesnar உள்ளிட்டோரை பேச வையுங்கள்.

அவர்கள் அண்டர் டேக்கர் குறித்த பல தெரியாத பின் கதைகளை சொல்லக்கூடும். பின்னர் இறுதியாக அண்டர் டேக்கரை பேச வையுங்கள். அதுதான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்துகளை பதிவிட்டு கதறி வருகின்றனர்.

Also Read: குழந்தையை கொஞ்சும் தளபதி விஜய்.. பீஸ்ட் அரபிக் குத்து பாட்டுடன் Trend ஆகும் வைரல் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Undertaker inducted into the WWE Hall of Fame Class of 2022

People looking for online information on Under taker, Undertaker, WWE, WWE Hall of Fame Class of 2022, WWF will find this news story useful.