இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ. ஆர். ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.
சமீபத்தில் வெளியான படங்களான மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.
இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.
பிறந்தநாளை முன்னிட்டு ரஹ்மானை அவரது ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஹ்மானை வாழ்த்தி கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்த இசைவாணர் ஏ.ஆர்.ரஹமான் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழிய பல்லாண்டு! #ARRahman" என ட்வீட் செய்துள்ளார். 'இசைவாணர்' என சிறப்பு பெயரையும் ரஹ்மானுக்கு கமல்ஹாசன் அளித்துள்ளார்.