உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’…. டிரைலர் & பாடல் ஒரே நாளில்… வெளியான செம்ம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

தயாரிப்பாளர், நடிகர்…

அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய்யின் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்தார். இதையடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ஒரு கல் ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலமாக அவர் அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து கதிர்வேலன் காதல், இப்படை வெல்லும், கண்ணே கலைமானே, சைக்கோ மற்றும் மனிதன் ஆகிய படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இணையாக தன் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வந்தார்.

சினிமா அரசியல்…

இதே நேரத்தில் அரசியலிலும் ஆர்வமாக இருந்த உதயநிதி திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை பெற்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் கைவசம் இப்போது நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடாதப் படம் ஆகியவை உள்ளன. அரசியல், சினிமா என இரண்டு துறைகளிலும் பயணம் செய்து வரும் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நெஞ்சுக்கு நீதி…

இந்நிலையில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’…. டிரைலர் & பாடல் ஒரே நாளில்… வெளியான செம்ம தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhaynidhi stalin nenjukku neethi Trailer launch update

People looking for online information on Boney kapoor, Neethi, Nenjukku, Udhayanidhi will find this news story useful.