BREAKING: உதயநிதி நடிக்கும் மகிழ் திருமேனி படத்தின் படப்பிடிப்பு எந்த ஊர்ல நடக்குது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மகிழ் திருமேனி கடைசியாக நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கிய "தடம்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. தடம் திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

udhaynidhi stalin magizhthirumeni movie update

அதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பெயரிடப்படாத புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்கி கொண்டிருக்கிறார். உதயநிதியின் இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

udhaynidhi stalin magizhthirumeni movie update

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியில் டைட்டில் கார்டு வென்றவர் நடிகர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று (08.06.2021) பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் தவிர, தற்போது உதயநிதி ஸ்டாலின் கைவசம் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிகிள் 15 ரீமேக் உள்ளிட்ட படங்களும் உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Udhaynidhi stalin magizhthirumeni movie update

People looking for online information on Magizh Thirumeni, Udhayanidhi Stalin will find this news story useful.