திமுக-வுக்கு புது சொல்லாடல்.. பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ அடுத்த லிரிக் வீடியோ அப்டேட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களில் இருந்தே தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் நடிகர் பார்த்திபன். தமக்கே உரிய வார்த்தை ஜாலங்களால் பேசியும் நடிக்கவும் செய்யும் பார்த்திபன் இயக்கிய திரைப்படங்கள் ஏராளம். அண்மையில் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்கிற திரைப்படம் தேசிய விருது பெற்றது.

Advertising
>
Advertising

Also Read | டிவி சீரியலில் RJ பாலாஜி & ‘சூரரைப்போற்று’ ஹீரோயின்.. வெளியான ப்ரோமோ

இதனைத் தொடர்ந்து இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் திரைப்படம் உருவாகி வருகிறது. ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்தும் வருகிறார். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற  படத்தில் இணைவதாக இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த திரைப்படத்தின் பெஜரா எனும் லிரிக் விடியோ முன்னதாக வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தம்முடைய அடுத்த பாடல் வெளியீடு குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தற்போது புதுமையான முறையில் தனக்கே உரிய பாணியில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி இரவின் நிழல் திரைப்படத்தின் அடுத்த லிரிக் வீடியோவை நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடவிருக்கும் செய்தியை தகவலாக பார்த்திபன் அறிவித்துள்ளதுடன், திமுக என்கிற சொல்லுக்கு புதிய சொல்லாக்கத்தை வேடிக்கையாக குறிப்பிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அசத்தியிருக்கிறார் பார்த்திபன்.

இது தொடர்பான பார்த்திபனின் அறிவிப்பில், "அடுத்த .‌. அடுத்த.‌.. அடுத்த ... அடுத்த லிரிக் வீடியோவை சட்டமன்ற உறுப்பினரும் எனது இனிய நண்பருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 16.6. 2022 மாலை 6 மணிக்கு வெளியிடுவார். இப்படிக்கு திரைப்பட முன்னேற்ற கழகத் தொண்டன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Behindwoods விருது பெற்ற கையோடு தழுதழுத்த குரலில் ஜெய் பீம் நடிகையின் உருக்கமான கோரிக்கை.. Video

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanithi to release Parthipan ARR Iravin Nizhal Lyric video

People looking for online information on AR Rahman, Iravin nizhal, Parthipan, Radhakrishnan Parthiban, Udhayanithi Stalin will find this news story useful.