தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்தது. இந்த வாக்குப்பதிவு மட்டுமல்லாது கன்னியாகுமரியில் இடைத்தேர்தலும் அதே நாள்ஒரே கட்ட தேர்தலாக நடந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக முன்னிலை வகித்தது. குறிப்பாக இளம் நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிகேனி தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவர் தனது தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை விட சுமார் 50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி அடிக்கல் நாட்டுவதற்காக எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் ஒன்றை மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி கொடுத்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் உதயநிதியின் வெற்றிச் சான்றிதழை அவர் கையெழுத்து போட்டு பெற்றிருக்கிறார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அபாரமாக வெற்றி பெற்ற உதயநிதிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.