தமிழில் ரீமேக் ஆகும் ARTICLE15.. ஹீரோ, டைரக்டர் யார் தெரியுமா? வலிமை பட தயாரிப்பாளர் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹிந்தி படமான "Article 15" படத்தின் உரிமையை முறையாக பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக Article 15 படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மறைந்த நடிகர் விவேக் சென்னை வடபழனி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்கின் உடல் அரசுமுறை மரியாதையுடன் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் விவேக்கின் மறைவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு விவேக்கின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் உதயநிதி மற்றும் ஆர்டிகள் 15 படக்குழுவினர் மற்றும் M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்),  ராஜா.C (விநியோக நிர்வாகம் - ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் படப்பிடிப்பை துவங்கினர்.

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் கனா திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanithi stalin hindi movie article15 remake in tamil

People looking for online information on Article15, Bayview Projects, Boney kapoor, Udhayanidhi Stalin, Zee Studios will find this news story useful.