நடிகர் உதயநிதி இந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிகேனி தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையின் போது தொடர்ந்து தாம் போட்டியிட்ட தொகுதியில் முன்னிலை வகித்து வந்தார். அத்துடன் இறுதியாக, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தம் தந்தை மு.க.ஸ்டாலினிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் திட்டத்தை வலியுறுத்தி செங்கல் ஒன்றை கொடுக்கும்படியான புகைப்படத்தை பதிவிட்டார். இதனை அடுத்து வெற்றிச் சான்றிதழில் கையெழுத்திட்டு தனக்கான சான்றிதழை உதயநிதி ஸ்டாலின் பெற்ற பின்னர் பத்திரிகையாளர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, “எதுவாக இருந்தாலும் நாளை தலைவர் ஸ்டாலின் பேசுவார். அதன் பின் நான் பேசுகிறேன்” என பதில் கூறினார்.
தான் போட்டியிட்ட இந்த முதல் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத வெற்றியை அடுத்து, தமது தாத்தாவும் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் (மெரினாவில் உள்ள) நினைவிடத்துக்கு சென்று மண்டியிட்டு விழுந்து வணங்கினார்.
ALSO READ: "ஜெயலலிதாவுக்கு அப்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் ஸ்டாலின்"!! - சித்தார்த்!