நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்து படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.
நெஞ்சுக்கு நீதி..
இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் சென்சார் ஆன இந்த படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது.
முதல்வருக்கு பிரத்யேக திரையிடல்…
நேற்று இந்த திரைப்படம் தமிழக முதல்வருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக படக்குழுவினர் சார்பில் வெளியான அறிவிப்பில் “நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.” எனறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உதயநிதியின் நன்றி…
இந்நிலையில் படத்தைப் பார்த்து பாராட்டிய தனது தந்தையும் முதல்வருமான மு க ஸ்டாலினுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார். அந்த டிவீட்டில் “திரு. போனி கபூர் அவர்களுடன் ராகுல் இணைந்து தயாரித்து, அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள எங்கள் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நேற்று பார்த்து, படக்குழுவினரை பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றி” என கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8