நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Also Read | மழைனா போதும் மெட்ராஸ் மக்களுக்கு பகோடா, டீ, ராஜா சார்.. ரசிகரின் கமெண்ட் ராஜாவின் ரியாக்ஷன்.!
விஜய் பிறந்தநாள்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலமாக அறிமுகமான விஜய் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. முன்னதாக நேற்று விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
குவியும் வாழ்த்துகள்…
இந்நிலையில் இன்று காலை முதல் சிவகார்த்திகேயன், A R முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தற்போது நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் “ஹேப்பி பர்த்டே தளபதி விஜய் அண்ணா” என்று வாழ்த்தியுள்ளார்.
அரசியலில் முதல்வர் மு க ஸ்டாலினை தளபதி என்று கட்சியினரும், தொண்டர்களும் அழைத்து வருகின்றனர். அதுபோல சினிமாவில் நடிகர் விஜய்யை ரசிகர்களும் திரைத்துறையினரும் தளபதி என்று அழைக்கின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் அண்ணா என்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தில் தெரிவித்தது தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
Also Read | இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி… ரசிகர்கள் வாழ்த்து…viral pics