”அரசியல்ல இருந்தாலும் வருஷத்துக்கு ஒரு படமாவது…” விக்ரம் மேடையில் ஆசையை வெளியிட்ட உதய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தை கமல்ஹாசனோடு இணைந்து வெளியிடுகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

Advertising
>
Advertising

Also Read | “கமல் சார் கூட நடிச்சாச்சு… அடுத்து இந்த ஆசைதான்”… விக்ரம் விழாவில் விஜய் சேதுபதி மாஸ் speech !

விக்ரம்…

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸாக உள்ள படமாக விக்ரம் உருவாகியுள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

கவனம் ஈர்த்த ஆடியோ விழா…

இதையடுத்து நேற்று நடந்த விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இப்போது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தை வெளியிடும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். கமல்ஹாசனோடு ஏற்கனவே இவர் மன்மதன் அம்பு திரைப்படத்தில் இணைந்த் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருஷத்துக்கு ஒரு படம்…

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “ கமல் சார் நீங்க இப்போ அரசியல்ல இறங்கி சிறப்பா போயிட்டு இருக்கீங்க.. ஆனால் நீங்க வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணனும். சில பேரு நான் கமல் சார மிரட்டி விக்ரம் படத்த வாங்கிட்டதா சொல்றாங்க. நான் இல்லீங்க யாருமே கமல் சார மிரட்ட முடியாது. மிரட்டுனாலும் கமல் சார் பயப்பட்ற ஆள் இல்ல. லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி ,மாஸ்டர் படங்கள நான் பாத்துருக்கேன்.” எனக் கூறியபோது ரசிகர்கள் விஜய் பெயரைக் கேட்டதும் கத்தி ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin wanted kamal to act films regularly

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Udhayanidhi Stalin, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.