மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
Also Read | ரெளடி பேபி ஹிட்டுக்குப் பின் இணைந்த தனுஷ்- பிரபுதேவா… ஜல்சா படத்தில் ‘வேறமாரி’ பாடல்?
மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’…
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தன. அதையடுத்து இப்போது அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போஸ்டரில் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பெயரை முதலில் இடம்பெறச் செய்திருந்தனர் படக்குழுவினர்.
மாமன்னன் ஷுட்டிங்…
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி ஏப்ரல் மாதத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் மாமன்னன் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதால் அவர் ரசிகர்களுக்கு இந்த இரு படங்களும் டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளன.
மாமன்னன் பற்றி உதயநிதி…
இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நேர்காணல் அளித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் பட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “ மாமன்னன் படம் பெரிய அளவில் பேசப்படும். மாரி செல்வராஜ் எப்படி படம் எடுப்பார்னு உங்களுக்கே தெரியும். ஏற்கனவே 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். அதில் வடிவேலு அண்ணனின் பெரும்பாலானக் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அந்த காட்சிகளைப் பாருங்கள் என மாரி செல்வராஜ் என்னிடம் கூறினார். ஆனால் நான் மொத்தமாக முடித்துவிட்டு பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தேன். கீர்த்தி அதைப் பார்த்திருக்கிறார். அவர் என்னிடம் ‘நீங்க இன்னும் பாக்கலியா. ரொம்ப நல்லா வந்திருக்கு…. நல்லா பண்ணிருக்கார். வித்தியாசமா இருக்கு’ எனக் கூறியுள்ளார். விரைவில் நான் பார்க்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த தகவலால் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8