"சாப்பிடலையா சார்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன்.

Advertising
>
Advertising

Also Read | Pathaan : செம டான்ஸ் ஆடிய ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. வெளியான 'பதான்' படத்தின் 2-வது பாடல் வீடியோ!

ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பேசியது, “கமல் சாரை இந்தியன் 2 மேக்கப்ல கண்டுபிடிக்க கஷ்டமா இருந்துச்சு. சார் சாப்பிடலையானு கேட்டேன். இல்லை வெறும் ஜூஸ் மட்டும் தான்னு கமல் சார் சொன்னார்.  எவ்வளவு நேரம் சார் ஆச்சு? மேக்கப்புக்குனு கேட்டேன். 4-5 மணி நேரம் ஆகும். சாயந்தரம் 6 மணி வரைக்கும் இப்படி தான் இருக்கனும்னு சொன்னாரு. இதுக்கு மேல வேற யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கமல் சார்க்கு இல்லை. இருந்தாலும் இந்த வயசுலயும் எங்கள் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கீங்க. அவரை பார்க்கும் போது பிரம்மிப்பா இருந்துச்சு. We all Love You sir" என உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.

Also Read | "இந்த 5 தமிழ் படங்களை வச்சு ஒரு Cinematic Universe".. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம்ம பதில்!

"சாப்பிடலையா சார்".. இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Talked about Indian 2 Movie Kamal Haasan

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar, Udhayanidhi Stalin will find this news story useful.