கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.
Also Read | "குழந்தை பெற்ற பிறகும் HOT-ஆ இருக்கீங்க".. இணையவாசியின் மோசமான கேள்விக்கு ப்ரணிதா பதிலடி!
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. தற்போது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்து உள்ளது.
இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.
இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கடந்த நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் & நரேன் பேசும் வீடியோ காட்சிகள் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளன.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & படக்குழுவினர் குறித்து சில விடயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, "நானும் கமல் சாரும் சில வருடங்களுக்கு முன்னாடி சேர்ந்த ஒரு படம் பண்ணோம். அந்த படம் சரியா போகல. அதுக்கும் நான் தான் காரணம். நான் தான் ஒரு காமெடி படம் பண்ணுவோம் அப்படின்னு சொன்னேன். அது எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. கமல் சார் வச்சு ஒரு ஹிட்டுக் கொடுக்க முடியலயே அப்படின்னு. இதெல்லாம் ஈடு செய்ற மாதிரி. விக்ரம் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கு. அடுத்து இந்தியன் 2, மணி சார் கூட பண்ற படம். இப்படி தொடர்ந்து உங்கள் கூடவே உங்க டிராவல்ல என்ன கைப்பிடிச்சு கூப்பிட்டு போறீங்க. உங்க அரசியல் பணிகளுக்கு நடுவில் வருசத்துக்கு ஒரு படம் நடிக்கனும்" என உதயநிதி ஸ்டாலின் பேசினார்
Also Read | "H. வினோத் முதல்ல வாரிசு தான் பாக்க போறார்".. துணிவு பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE!