ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், 'துப்பாக்கி' வில்லன் வித்யூத் ஜாம்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை பகிர்ந்த கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை துவங்கவிருப்பபதாக கமல்ஹாசன் அதறிவித்தார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இந்நிலையில் முன்பு ஒருமுறை உதயநிதி ஸ்டாலின் Behindwoods TVக்கு பேட்டியளிக்கும் போது கமல்ஹாசன் குறித்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ''தலைவன் இருக்கின்றான்'' படக்கதையை என்னிடம் சொன்னார். அது அரசியல் கதையாக இருந்ததால் நான் செய்தால் நன்றாக இருக்காது. எனக்கு 'பஞ்சதந்திரம்' மாதிரியான கதைகள் இருந்தால் சொல்லுங்கள்'' என்றேன். என்று தெரிவித்தார்.