ரிலீசுக்கு முன்பே ஆமிர்கான் நடித்த படத்தை பார்த்த உதயநிதி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லால்சிங் சத்தா படத்தை பார்த்து விட்டு வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "சர்தார்" படத்துக்காக களமிறங்கிய கார்த்தி.. இயக்குனர் P.S.மித்ரன் வெளியிட்ட ஜாலியான வீடியோ!

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது.

டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் ஆமீர் கான்  நடிக்கிறார்.  ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் படத்தை பிரத்யேகமாக பார்த்து விட்டு உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் "லால்சிங் சத்தா! வாவ்! ஆமிர் கான் சாருக்கு தலைவணங்குகிறேன். இந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது. ரசிகனின் தருணம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.

இந்த படத்தின் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம்  11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read | "சிங்கத்துக்கும் புலிக்கும் பொறந்தவன்டா".. LIGER படத்தின் மிரட்டலான டிரெய்லர்

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Review about Aamir Khan Laal Singh Chaddha Movie

People looking for online information on Aamir Khan, Laal Singh Chaddha Movie, Udhayanidhi Stalin will find this news story useful.