போராட்ட களத்தில் குதித்த நடிகர் உதயநிதி.. எதுக்காக தெரியுமா?.. அனல் பறக்கும் பேட்டி.. VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா மோத்வானி, சந்தானம் நடித்த இந்த கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி சந்தானத்துடன் இணைந்து ‘நண்பேண்டா’ மற்றும் ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்களில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இதேபோல் நடிகர் பார்த்திபடனுடன் இணைந்து ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் மகேஷிண்ட பிரதிகாரம் எனும் மலையாள படத்தின் தமிழில் ரீமேக் படமான 'நிமிர்' திரைப்படத்தில், இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மறைந்த இயக்குநர் மகேந்திரன் மற்றும் இயக்குநர், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தொகுதி பணிகள், கட்சிப் பணிகள் என மும்முரமாக அரசியல் ஒரு கண்ணாகவும், திரைப்படம் ஒரு கண்ணாகவும் வைத்துக் கொண்டு செயல்படும் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரும் தமது தந்தையுமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதேபோல் திமுக இளைஞரணி செயலாளராகவும் செயல்படுகிறார்.

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கட்சியினருடன் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி போராடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கையில் பதாகைகளை ஏந்தி விலை உயர்வை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று குரல் கொடுத்திருந்தார்.

அதன்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் இந்த போராட்டத்தின்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘ஆர்டிகள்15’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல இந்தி படமான இந்த திரைப்படம் தமிழில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

போராட்ட களத்தில் குதித்த நடிகர் உதயநிதி.. எதுக்காக தெரியுமா?.. அனல் பறக்கும் பேட்டி.. VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin Protest gas petrol diesel hike viral video

People looking for online information on DMKProtest, MKStalin, Udhayanidhi Protest, Udhayanidhi Stalin will find this news story useful.