"பூஜா ஹெக்டே, குத்து குத்துனு குத்திட்ருகாங்க" - அரபிக்குத்து பாட்டை புகழந்த உதயநிதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பூஜா ஹெக்டேவையும், அரபிக்குத்து பாடலையும் புகழ்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று  ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது…

மூணு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் இந்த கதையை சொன்னார் முதல் பாதி கைரேகை பற்றி சொன்ன போது, எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கேட்கையில் இந்தக்கதை மனதிற்குள் புகுந்துகொண்டது. எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது அதை தான் இயக்குநர் பிரமாண்டமாக திரையில் வரைந்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் பூஜா மிக மிக சூப்பராக நடித்திருக்கிறார். அந்த காட்சியை எப்படி எழுதினார்கள் என வியப்பாக இருந்தது. ஜஸ்டின் மிக அழகான மெலடி பாடல்களை தந்துள்ளார். பிரபாஸ் ரொம்ப நாள் கழித்து ஆக்சனில் இருந்து ஒதுங்கி, நல்ல ரொமான்ஸ் படம் செய்துள்ளார். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பேசியதாவது…

இந்தப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ஒரு இசையமைப்பாளராக நிறைய கனவு இருந்தது அதையெல்லாம் இப்படத்தில் செய்ய முடிந்தது. ஆர்கெஸ்ட்ரா புத்தபெஸ்டில் செய்துள்ளோம். நாம் பாடல் செய்த பிறகு விஷுவல் எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றும் ஆனால் இதில் மனோஜ் சார் கலக்கியிருந்தார். பூஜா, பிரபாஸ் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. சத்யராஜ் பாகுபலியிருந்து வித்தியாசமான ரோல் செய்துள்ளார்.  படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி

நடிகர் சிபி சத்யராஜ் பேசியதாவது…

எனக்கு கைரேகை பார்க்க தெரியாது ஆனால் போஸ்டர் பார்த்தாலே பிரமாண்ட ஹிட்டாகும் என தெரிகிறது. பிரபாஸ் சார் நான் உங்களின்  தீவிர ஃபேன், உங்களை பற்றி அப்பா நிறைய சொல்லியிருக்கிறார். இப்போது அதிகம் புழங்கும் பான் இந்தியா என்ற அடைமொழி பாகுபலியில் தான் ஆரம்பித்தது.  பாகுபலிக்கு பிறகு நீங்கள் செய்யும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கிறது. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் நன்றி.

தயாரிப்பாளர்/நடிகர் உதயநிதி பேசியதாவது…

ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும்.

பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார்,  இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி

 

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin praises Pooja Hegde for Arabic Kuththu

People looking for online information on Arabic Kuththu, Pooja Hegde, Radhe Shyam, Udhyanidhi stalin will find this news story useful.