நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | BREAKING : நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

அஜித் குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சோகம்

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், தயாரிப்பாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித் குமார் வீட்டுக்கு நேரில் சென்று மறைந்த சுப்பிரமணியம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதேபோல அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைவிற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ட்விட்டர் வழியாக இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | நடிகர் அஜித் தந்தை மறைவு.. இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin pays Respect to Late Ajith Kumar Father

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Father Demise, Udhayanidhi Stalin will find this news story useful.